Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இரு புதல்விகளுமான அபர்ணா மற்றும் அப்சரா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறீலங்காவை விட்டு வெளியேறியள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரும் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளதாக விமானநிலையத் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை மேற்படி இருவரும் எதுவித கட்டுப்பாடோ அல்லது வரம்போ இன்றி பண்டாரநாயக்க விமானநிலையத்தில் இருந்து புறப்பட அனுமதிக்கப்பட்டிருந்தனர் எனவும் கூறப்படுகிறது.

இவர்களுடன் சரத்தின் மருமகன் தனுன திலகரட்ன சேர்ந்து சென்றாரா என விசாரித்தபோது, இல்லை என தகவல் கிடைத்துள்ளது.

0 Responses to பொன்சேகாவின் இரு புதல்விகளும் அமெரிக்கா சென்றனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com