தமிழீழத்தில் நடந்துகொண்டிருந்த பேரழிவை தடுக்குமாறு தமிழக, இந்திய அரசுகளை கேட்டும் உலக நாடுகளை தலையிடுமாறு வற்புறுத்தியும் தங்களையே தகனம் செய்து தமது உயிரை ஈகம் செய்த 19 ஈகியர்களின் நினைவுநாள் நிகழ்வு ஆஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.தமிழகத்திலும் தமிழர்களின் புலம்பெயர் தேசங்களிலும் 19 ஈகியர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றுவருகின்றது. ஆஸ்திரேலியாவின் மெல்பேணிலுள்ள சென் ஜூட்ஸ் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 31-01-2010 அன்று மாலை 5 மணி தொடக்கம் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இந்நினைவுநாள் நிகழ்வை இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 ஈகியர்களின் நினைவுகள் தொடர்பான உரைகள் இடம்பெற்றன. குறிப்பாக இன்றைய காலத்தில் தமிழர்கள் தொடர்ந்தும் தமது தாயகத்திலுள்ள மக்களுக்காக உழைக்கவேண்டும் என்றும் தம்மையே எரித்து தமது உயிர்களை ஈகம் செய்தோரின் குடும்பங்களை புலம்பெயர் தமிழர்கள் பராமரிக்கவேண்டும் என்றும் உரையாற்றியோரால் வலியுறுத்தப்பட்டது.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற உறுதியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.






0 Responses to மெல்பேண் ஈகியர் நாள் நிகழ்வு 2010