Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரிட்டன் தொலைக்காட்சி சனல் 4 முடக்க சிறீலங்கா அரசு சதி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் பிரிட்டன் தொலைக்காட்சி சனல் 4 ஒளிபரப்பிய சிறீலங்கா இராணுவத்தின் படுகொலைக் காட்சிகளின் பின்னர், அது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது.

பிரிட்டனில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்துத் தொலைக்காட்சிகளையும் கட்டுப்படுத்தும் அல்லது நெறிப்படுத்தும் நிறுவனமாக விளங்கும் 'ஆப்காம்' (OFCOM)திடம் இலங்கை பல முறையீடுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன். எந்தக் காட்சிகளை மக்கள் பார்க்கலாம் அவை பயங்கரவாதத்தை துண்டுகின்றனவா என்பது போன்ற ஒளிபரப்புக்களை நெறிப்படுத்தும், ' ஆப்காம்' நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாகும்.

இந்நிறுவனம் நினைத்தால் ஒரு தொலைக்காட்சியின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச்செய்து அதனை மூட முடியும். இந்நிலையில், சிறீலங்கா அரசின் முறையீட்டின் பேரிலேயே TRT, TNT, TTN போன்ற தொலைக்காட்சிகள் கடந்தகாலங்களில் மூடப்பட்டன. இதே நடவடிக்கையை தற்போது சிறீலங்கா அரசு சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக ஆரம்பித்துள்ளது.

பிரிட்டனிலுள்ள ஊடகச் சுதந்திரத்தை முடக்க அங்குள்ள சட்டம் ஒருபோதும் முயற்சி செய்யமாட்டாது என்பதால் பிரிட்டனின் அவதூறு சட்டங்களைக் கடந்து நேரடியாக ஆப்காமைப் பயன்படுத்தி சனல் 4 இன் ஒளிபரப்பை நிறுத்துவதற்கு சிறலங்கா அரசு முயற்சிப்பதாக கூறபடுகிறது. கடந்த வருடம் சனல் 4 ஒளிபரப்பிய வீடியோவில் 9 இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு கட்டப்பட்டு இருந்ததையும், அதில் இருவர் சுடப்பட்டுக் கொல்லப்பட்டதையும், இந்த பாதகச் செயலைச் செய்தவர்கள் சிறீலங்கா இராணுவச் சீருடையில் இருந்ததையும் கண்ட உலகம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

ஆனால், அந்த வீடியோ ஒளிபரப்பபட்ட உடனுமே சிறிலங்காத் தூதரகம் அந்த வீடியோ உண்மை அல்ல என மறுப்பும் தெரிவித்திருந்தது. இலங்கையின் பகுப்பாய்வைச் செல்லாததாக்கி மேற்படி வீடியோவானது உண்மையானது என்று ஐக்கிய நாடுகள் தமது அறிக்கையைச் சமர்ப்பித்ததும் சனல் 4 க்கு எதிரான நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன.

இருந்தும் .நா வி ன் அறிக்கை வெளியிடப்பட்ட அன்று மாலையே சிறீலங்கா தனது முறைப்பாடுகளை ஆப்காமிடம் கூறியுள்ளதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

0 Responses to சனல் 4 தொலைக்காட்சியை முடக்க சிறீலங்காவின் புதிய சதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com