Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குவைத் நாம் தமிழர் பேரியக்கத்தின் சார்பில், மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் தமிழர் எழுச்சி நாளாக கைபிடிக்கப்பட்டது.

மாவீரன் அப்துல் ரவூப் நினைவரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் தொடக்கமாக மாவீரன் முத்துக்குமார், மேதகு வேலுப்பிள்ளை உள்ளிட்ட ஈகியர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து செந்தில் குமார் அவர்கள் மாவீரர் நாள் பாடலை பாடினார்.

அடுத்து, நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாவீரர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

தமிழோசை நிறுவனர் இராவணன் அவர்களின் எழுச்சிமிகு உரையோடு தொடங்கிய கூட்டத்தில், தோழர்கள் தமிழமுதன், அகிலோதயன், திருமதி ஸ்டெல்லா, விருதைபாரி உள்ளிட்டோர் வீரவணக்க கவிதைகள் படிக்க, தமிழ்க்காதலன், தமிழ் நண்பர்கள் மன்ற தலைவர் வெங்கடேசன், அறிவழகன்,தோழர் ஆறுமுகம் பட்டுக்கோடடை சத்யா, அழ.பாண்டிச்செல்வம், உள்ளிட்டோர் எழுச்சி மிகு உரையாற்றினார்கள்.

தொடர்ந்து மாவீரன் முத்துகுமார் அவர்களின் இறுதி உரையினை இளம்தமிழர்.பகலவன் (என்ற) மதன் படித்தார் தொடர்ந்து இலங்கை பொருட்களை புறகணிப்போம் இலங்கை விமான பயணத்தை புறகணிப்போம் என்ற உறுதிமொழியும் அதனை தொடர்ந்து மாவீரன் முதுகுமரனக்கு மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது

நிகழ்வின் இடையே, தாய்மண் கலை இலக்கியப் பேரவையின் தலைவர் தோழர் அன்பரசன் அவர்கள் தமிழர் எழுச்சி நாள் நூலினை வெளியிட, உதவும் கைகள் தலைவர் தோழர். இராசேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். தமிழர் எழுச்சி நாள் குறுந்தகட்டினை தோழர் பிரபாகரன் வெளியிட தாய்மண் கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் தோழர் அறிவழகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

தொடர்ந்து செந்தில்குமார் அவர்கள் "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" என்ற பாடலை பாட அரங்கத்தினர் அனைவரும் பாடலோடு இணைந்து கைதட்டி எழுச்சியூட்டினர்.

தமிழர் எழுச்சி நாள் உரையினை நாம் தமிழர் பேரியக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழர்.சீமான் சென்னையில் இருந்தபடியே தொலைபேசி வழி எழுச்சிமிகு உரையாற்றினார்கள்.

நிறைவாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பெருந்திரளானவர்கள் நாம் தமிழர் பேரியக்கத்தின் உறுப்பினர்களாக இணைந்துகொண்டனர். அனைவருக்கும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட நூலும் குறுந்தகடும், திருவள்ளுவர் ஆண்டு 2041 நாட்காட்டியும் வழங்கப்பட்டது.

தமிழ் உணர்வூட்டக்கூடிய நூல்கள் தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது, பெரும்பாலானவர்கள் வாங்கிப் பயனடைந்தனர். உணர்ச்சிபெருக்கோடு நடைபெற்ற தமிழர் எழுச்சி நாள் நிகழ்ச்சிகள் பெரும் எழுசசியோடு நிறைவடைந்தன.

தமிழ்நாடன்
குவைத் நாம் தமிழர் பேரியக்கம்





0 Responses to மாவீரன் முத்துக்குமார் நினைவு வணக்கம்: குவைத் நாம் தமிழர் பேரியக்கம் (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com