Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலங்களில் ஆயுதம் ஏந்திய இயக்கங்களாலும், அரசியல்வாதிகளாலும் உருவாக்கப்பட்ட கருத்துக்கள் தம்மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதாகவும் இப்படியான சுதந்திரமற்ற செயல்களே இன்றைய சமுதாய அழிவிற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் தம்மைக் கலந்து ஆலோசிக்காமலே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இப்படியான செயலை இனியும் ஏற்க முடியாது என்ற கோஷத்துடன் யாழில் ஓர் அழுத்தக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்தி வருமாறு..

இலங்கையின் வடக்கே யாழ்குடா நாட்டில் தங்களது எதிர்காலத்தையும் வாழ்வாதாரங்களையும் உறுதிப்படுத்தும் வகையில் அங்கு சமூக ஆர்வலர்களால் அழுத்தக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரசியல் தலைமகள் மற்றும் போராளிக் குழுக்களின் தீர்மானங்களே தம் மீது திணிக்கப்பட்டதாகவும் அப்படியான செயற்பாடுகள்தான் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் என்று இந்த அழுத்தக் குழுவினர் கூறுகிறார்கள்.

இந்தக் குழுவில் எதிர்வரும் காலத்தில் முஸ்லிம் மக்களையும் இனைத்துக் கொள்ள இவர்கள் தீர்மானித்துள்ளனர். இதன் மூலம் வடகிழக்கு பகுதியில் சிறுபான்மையினர் தொடர்பான அரசியல் மற்றும் அபிவிருத்தி பணிகளில் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது சமூக மட்டக் குழுக்களுடன் கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோருகிறார்கள்.

இந்த அழுத்தக் குழுவில் பல்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளார்கள். வடபகுதியில் இருக்கும் அனைத்து மாவாட்டங்களில் இருந்தும் பலர் இந்த அழுத்தக் குழுவில் இணைந்துள்ளனர்.

யாழ்மாவட்ட மீனவர் சங்கங்களின் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் தவரட்ணம் அவர்களின் தலைமையில் இந்த அழுத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

0 Responses to பட்டது போதும் ஆளைவிடு சாமி! யாழ். மக்களிடையே புதிய விழிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com