Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அன்புக்கும் மதிப்புக்குமுரிய எமது வர்த்தக பெருமக்களுக்கும், ஏனைய தமிழர் அமைப்புகளுக்கும், சங்கங்களுக்கும், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை முதற்கண் தனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.

அன்புடையீர், ஈழத்தமிழர்கள் நாங்கள் மாண்புடனும், மகிழ்வுடன் வாழவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக ஈடு இணையற்றதும், சொல்லிலும், எழுத்திலும் எழுதிவிட முடியாத அர்பணிப்புக்களையும் செய்துள்ளோம், செய்துவருகின்றோம், செய்வோம் என்கின்ற உறுதியுடன் புலம் பெயர் மண்ணில் வாழ்ந்து வருகின்ற இவ்வேளை, சர்வதேசத்தின் காதுகளில் ஈழத்தமிழர்களாகிய எங்கள் அழுகைக்குரல் இப்போது தான் கேட்கத்தொடங்கியுள்ளது.

அந்த தர்மத்தின் அழுகைக்குரலும், அவலக்குரலும் மனிநேயமிக்க ஐனநாயகத்தை மதிப்பவர்களின் மனசாட்சியை தொட்டும், உலுக்கியும் நிற்பதை அவர்களின் அண்மைக்கால அணுகுமுறைகளை பார்க்கும் போது அதனைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

இந்த நேரத்தில் எங்களின் இத்தனை வருடகால அபிலாசைகளையும், விருப்புகளையும் அரசியல் ரீதியில் நிறைவேற்றவும், நிண்டகாலமாக துன்பமே தமது வாழ்வாக கொண்டு வாழ்கின்ற எங்கள் மக்களின் துயரை ஒரளவேனும் துடைக்கும் வழிவகைகளை ஆராயந்து உதவவேண்டிய தலையாய தார்மீக கடமைகள் எல்லா தமிழ்மக்களுக்கும் உண்டு.

இந்த வகையில் தமிழீழம் நோக்கி …. ஏன்கின்ற தலைப்பில் தமிழ்மக்களின் ஐனநாயக ரீதியிலான கருத்துக்களை உள்வாங்கி அதற்கு மதிப்பளித்து எதிர்கால செயற்பாட்டிற்கு தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தருவீர்கள் என்ற எதிர்பார்ப்புடனும், கடந்த ஆண்டு உருவாக்கம் கண்ட தமிழீழ மக்கள் பேரவை இதுவரை தன்னால் தமிழீழம் நோக்கி மேற்கொள்ளப்பட்ட அரசியல் ரீதியில் மேற்கொண்ட செயற்பாடுகள், இனி மேற்கொள்ளப்படப்போகும் செயற்பாடுகள் நடைபெறப்போகும் ஒன்றுகூடலில் தெரிவிக்கவுள்ளனர் என்பதையும் தெரிவித்துக்கொள்வதோடு தாங்கள் அனைவரையும் இவ் ஒன்றுகூடலில கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணமும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

காலம். 07.02.2010. ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 16.00 மணிக்கு
124 Bis rue du Bagnolet ல் அமைந்துள்ள மண்டபத்தில்

( metro : Porte de Bagnolet – ligne 3)

நன்றி

பணிவன்புடன்
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
தொடர்புகளுக்கு. திரு. 06 15 88 42 21

0 Responses to தமிழீழத்தை நோக்கி….ஒன்றுகூடல்: பிரான்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com