அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அரசுடன் இணைந்து செயல்படும் யோசனைக்கு அது வந்திருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.
இதுதொடர்பாக ராஜபக்சேவுடன் பேசவும் திட்டமிட்டப்பட்டு வருகிறதாம். அதிபர் தேர்தலுக்கு முன்பாக ராஜபக்சேவை, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்தித்து கூட்டமைப்பு மற்றும் தமிழர்களின் கோரிக்கைகளை விவரித்திருந்தார். இருப்பினும் ராஜபக்சேவிடமிருந்து சாதகமான பதில் வராமல் போகவே பொன்சேகாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது கூட்டமைப்பு.
அதிபர் தேர்தலில் தமிழர் பகுதிகளில் முழுக்க முழுக்க பொன்சேகாவுக்கே ஆதரவாக வாக்குகள் விழுந்தன. இந்த நிலையில், அரசுடன் மோதல் போக்கைக் கையாளாமல் கூட்டணியில் இணைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்புவதாக கூறப்படுகிறது.



0 Responses to ராஜபக்சேவுடன் கூட்டு சேர த.தே.கூட்டமைப்பு முடிவு: சிங்கள ஊடகம்