Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா அகதி முகாம்களில் உள்ள சிறுவர்கள் கல்விகற்பதற்கு பாடசாலையொன்று ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி முகாம்களிலுள்ள மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த மாலை நேர வகுப்புகளை நேற்றுமுன்தினம் முதல் நிறுத்தி விட்டு, அவர்களுக்கு வவுனியா காமினி மகா வித்தியாலயத்தை முழு நேர பாடசாலையாக வழங்குவதற்கு வவுனியா கல்வியதிகாரிகள் முன்னர் தீர்மானித்திருந்தனர். இதனடிப்படையில் முகாம்களில் உள்ள மாணவர்கள் குறித்த பாடசாலைக்கு சென்றபோது, பாடசாலையில் எவ்வித வசதிகளோ, கற்றலுக்கான ஏற்பாடுகளோ மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

இதன் காரணமாகவே இடம்பெயர்ந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்ட நடைபெற்ற இடத்திற்கு சென்ற வவுனியா பிரதான கல்விப் பணிப்பாளர் பீ.ஆர்..ராஜினி ஒஸ்வல்ட் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைக்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

0 Responses to அகதிமுகாம் மாணவர்களுக்கு பாடசாலை கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com