நடந்து முடிந்த அரசதலைவர் தேர்தலில் பாரிய மோசடிகளும் முறைகேடுகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா இன்று புதன்கிழமை காலை தேர்தல் ஆணையாளரிடம் உத்தியோகபூர்வ தனது முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.தேர்தலின்போது வாக்குகள் எண்ணும்போது இடம்பெற்ற முறைகேடுகள், தனக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் எரிந்தநிலையில் குப்பையிலிருந்து மீட்கப்பட்டமை, கணனி மூலமான வாக்குமோசடி குற்றச்சாட்டு உட்பட பல விடயங்களை உள்ளடக்கிய முறைப்பாட்டினை தேர்தல் ஆணையாளரிடம் சரத் பொன்சேகா கையளித்துள்ளார்.
பொன்சேகாவின் முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்துவதாக தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.



0 Responses to தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ஆணையாளரிடம் பொன்சேகா முறையீடு!