கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு அளித்த மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரன் தான் தொடர்ந்தும் மகிந்தவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இணைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் முன்னர் அங்கம் வகித்த பிள்ளையானின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையப்போவதில்லை என்றும் சிவகீதா தெரிவித்துள்ளார்.சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டே எதிர்க் கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு அளித்த அர்ஜன ரணதுங்காவைப் போன்றே தானும் சுதந்திரக் கட்சியில் இருந்து சரத்திற்கு ஆதரவு அளித்திருந்ததாக சிவகீதா மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.



0 Responses to மட்டு மேயர் சிவகீதா தொடர்ந்தும் மகிந்த கட்சியில் இருப்பார்