Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொது தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகளை பெறவேண்டுமாயின் தனித்து போட்டியிடவேண்டும் அப்போதுதான் வெல்ல முடியும், வென்ற பின்னர் வருகின்ற அரசுடன் கூட்டு சேரலாம் என்பதே பிள்ளையான் இராணுவ துணைக் குழுவின் கூடுதலான அங்கத்தவர் விருப்பமாம்.

இது தொடர்பாக இன்று முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது பசில் இராசபக்‌ச பிள்ளையானை தொடர்பு கொண்டு முடிவினை ஒத்தி போடும்படியும் மகிந்த வந்தவுடன் புதன்கிழமை தான் சந்திக்க விரும்புவதாகவும் அதன் பின்னர் முடிவு எடுக்கும்படி அழுத்தமாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் முடிவு எதுவும் இன்றி, தீர்மானம் இயற்றாமலே கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. தனித்து கேட்டால் பிள்ளையானுக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பசில் மற்றும் கோத்தபாய ஆகியோர் மிரட்டி வருகின்றனர்.

பிள்ளையான் மீது ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, ஊழல் ஆகியன தொடர்பாக பல குற்ற சாட்டுக்கள் அடங்கிய கோவைகள் கோத்தபாயவிடம் இருப்பதாக கூறப்படுகின்றது.

0 Responses to முடிவெடுக்க முடியாது திண்டாடும் பிள்ளையான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com