செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழீழ அகதிகள் மீது, தமிழக காவற்துறையால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழினப் பாதுகாப்பு போராட்டக்குழு தலைமையில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
கடந்த வியாழக்கிழமை (4) மாலை 4மணிக்கு மெமோரியல் மண்டபம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பத்திரிகை ஆசிரியர் கா. அய்யநாதன் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் பா.புகழேந்தி, பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ்.மணி, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வழக்கறிஞர் சங்கர், தபசி குமரன், நாத்திகன் கேசவன் மற்றும் வேளச்சேரி மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



0 Responses to தமிழீழ அகதிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: சென்னை