Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உண்மையான குற்றவாளிகளைச் சுதந்திரமாக வெளியே நடமாடவிட்டுவிட்டு அப்பாவிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதாக சி..டி இனருக்கு மவுண்ட் லாவணியா குற்றவியல் நீதிபதி ஹர்ஷா சேதுங்க கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை ஏமாற்றவோ, அப்பாவி பொதுமக்களை கைது செய்யவோ முயற்சி செய்ய வேண்டாம் என்றும் நீதிபதி நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மோசடி வழக்கொன்றைக் கையாளும் சி..டி நபர் ஒருவர் தனது கடமையைச் சரியாகச் செய்யாவிட்டால் குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டி வரும் எனவும் கூறியுள்ளார் நீதிபதி. மேலும் சி..டி இனருக்கு ஆலோசனை வழங்கிய நீதிபதி ஹர்ஷா தனிப்பட்ட நபர்களால் வழங்கப்பட்ட கூற்றுக்களை வைத்தே கைது செய்யப்படும் நபர்களிடம் சி..டி இனர் விசாரணை நடத்துவதாகவும் கேள்வி எழுப்பினார்.

சரியாக விசாரணைகளை மேற்கொள்ளாத சி..டி அதிகாரி உண்மையான குற்றவாளியை விடுத்து அப்பாவி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்போது தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்காததால் நீதிபதி பல கேள்விகளைக் கேட்டார். ஒரு சி..டி ஆல் உண்மையைக் கண்டுபிட்க்க முடியவில்லை என்றால் அவர் அந்த வழக்கு விசாரணைக்கே இறங்கக்கூடாது என நீதிபதி மேலும் கூறியுள்ளார்.

0 Responses to ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம்- சி.ஐ.டி இனருக்கு நீதிபதி எச்சரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com