Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விஜய.டி.ராஜேந்தர் அவர்கள் இலட்சிய தி.மு. வின் நிறுவனத் தலைவராகச் செயல்படுவர் என்றும் பொதுச் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலட்சிய தி.மு. தலைவர் விஜய.டி.ராஜேந்தர் அவர்கள் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இலட்யகத்தில் நடைபெற்றது இக் கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செம்மல் எழுமலை செல்வம் அவர்கள் மறைவிற்கு இரங்கல் தொரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இலட்சிய தி.மு.. கழகப்பணியை செம்மையாக நிறைவேற்ற விஜய.டி.ராஜேந்தர் அவர்கள் இட்சிய தி.மு. வின் நிறுவனத் தலைவராகச் செயல்படுவார் என்றும் இலட்சியத் தி.மு.. வின் கொடி கருப்பு - நீலம் - சிவப்பு என்ற மூவர்ணக் கொடியாக மாற்றம் செய்யப்படும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் இச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இச்செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு...

இலட்சிய தி.மு. தலைவர் விஜய.டி.ராஜேந்தர் அவர்கள் தலைமையில் 03.02.10 அன்று நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

தீர்மானம்;- 1. திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவி தன் அறிவாற்றலாலும் கருத்து ஆக்கத்தாலும் அற்புத மாற்றங்களை உருவாக்கிய காஞ்சித் தலைவன் பேரறிஞர் அண்ணாவின் நினை நாளில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்திவிட்டு அவருக்குப் புகழ்மாலை சூட்டி அவர் வழியில் அறவழியில் நின்று அயராது பாடுபடுவோம் என்று அவரால் ஏற்றப்பட்ட இலட்சிய தீபத்தை தாங்கி இலட்சியத்தோடு இலட்சிய தி.மு.. நடைபோடும் உறுதியோடு செயல்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்:- 2. மதுரை புறநகர் மாவட்ட சார்ந்த கழகச் செம்மல் எழுமலை செல்வம் அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம்:- 3. நமது இலட்சிய தி.மு.. கழகப்பணியை செம்மையாக நிறைவேற்ற தலைவர் விஜய.டி.ராஜேந்தர் அவர்கள் இட்சிய தி.மு. வின் நிறுவனத் தலைவராகச் செயல்படுவார் என்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்:- 4. எளிமையாக கட்சி கொடியின் நிறமும் வடிவமும் இருந்தால்தான் தொண்டர்கள் துணிவாங்கி சுலபமாக தைத்து ஆங்காங்கே கொடியேற்ற முடியூம் என்ற காரணத்தாலும் மற்ற கட்சிகளின் கொடிகளிலிருந்தும் மாறுப்பட்டு தொரிய வேண்டும் என்ற காரணத்தாலும் கொடியின் வண்ணத்திலும் வடிவிலும் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. கருப்பு - நீலம் - சிவப்பு என்ற மூவர்ணக் கொடியாக நமது இலட்சியத் தி.மு.. கொடி மாற்றம் செய்யப்படுகிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்:- 5. கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையைத் தடுத்து புதிய அணையைக் கட்டமுயற்சிப்பதையும் அதற்கு அனுமதி அளித்த மத்திய அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம்:- 6. சமச்சீர் கல்விக் கட்டணம் முறைப்படுத்தப்பட்டதை போல சமச்சீர் பேருந்துக் கட்டணத்தையும் மாநில அரசு நிர்ணயம் செய்யவேண்டும் என்ற இந்த பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்:- 7. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத மத்திய மாநில அரசை வன்மையாகக் கண்டிக்கிறது. விலவாசி ஏற்றத்திற்காகவும் மறைமுக பேருந்து கட்டணம் உயர்வுக்காகவும் மாநில அரசைக் கண்டித்து நமது இலட்சிய தி.மு.. மாவட்டம் தோறும் போராட்டம் நடத்தும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்:- 8. அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆட்சிக்கு வந்திருக்கும் ராஜபக்சேவின் அத்துமிறல்கள் நிறைந்த ஆட்சியிலே இலங்கை வாழ் தமிழர்களின் அடிப்படை உரிமைகளே கேள்விக் குறியாக இருக்கிறது. இலங்கை வாழ்தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டிய தார்மீகப் பொறுப்புகள் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இருக்கிறது. அவர்களுக்கு அதை பெற்றுத் தர மத்திய அரசும் மாநில அரசும் முன்வர வேண்டும் என்று இந்த பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்:- 9. விஞ்ஞானாரீதியாக முன்னேறி இருக்கின்ற உலக நாடுகளே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை தவிர்த்து இருக்கிறது. முறைகேடுகளை தடுக்க மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைத் தவிர்க்கவேண்டும். இயந்திர வாக்குப் பதிவு அது ஒரு தந்திர வாக்குப் பதிவு மூடுமந்திர வாக்குப் பதிவு என்று இலட்சிய தி.மு. கருதுகிறது. இயந்திர வாக்குப் பதிவு இருக்கின்ற வரையில் ஆளும்கட்சியின் வசம் ஆட்சி என்ற இயந்திரம் இருக்கின்ற வரை ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்பது சாதரண காரியமில்லை என்பதால் அகில இந்திய ரீதியில் அனைத்து எதிர்க்கட்சிகளும் மனமாச்சர்யங்களை மறந்து ஒன்றுபட்டு போராடினால் மட்டும்தான் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும் என்பதை இந்த பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்:- 10. கைக்குழந்தை பருவத்திலிருந்து தொடங்கி குழந்தை நட்சத்திரமாக நடித்து 25 வயதில் தமிழில் 25 திரைப்படங்களில் நடித்து உலக சாதனை படைத்த யங் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் அவர்களுக்கு 'கலைத் துறையில் நீ கால் பதித்து கால்நூற்றாண்டு! கலைத்தாயின் திருமகனே வாழிய நீ பல்லாண்டு!" என இன்று பிறந்த நாள் வாழ்த்துகளை இப்பொதுக்குழு தொரிவித்துக்கொள்கிறது.

இவண்

தலைவர்

விஜய T.ராஜேந்தர்

இலட்சிய தி.மு.

0 Responses to விஜய.டி.ராஜேந்தர் இலட்சிய தி.மு.க வின் நிறுவனத் தலைவராகச் செயல்படுவார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com