Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மனி பேர்லினில் நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் அத்தோடு கேணல் கிட்டு மற்றும் மாதந்தை திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை பேர்லின் நகரில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார், கேணல் கிட்டு மற்றும் மாதந்தை திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் அர்ப்பணித்த உன்னத தியாகத்தை நினைவு கூறி வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

அகவணக்கத்துடன் ஆரம்பித்த இந் நிகழ்வில் சுடர் வணக்கம, மலர் வணக்கம் மண்டபம் நிறைந்த மக்களால் தியாகிகளின் திருவுருவப்படங்களுக்கு செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து கவிதைகளோடு தாயகத்தின் தற்போதைய நிலையை எடுத்துரைக்கும் நாட்டியநடனமும் சிறப்புரைகளும் இடம்பெற்றன. மிக மோசமான காலநிலை நிலவியபோதும் நூற்றுக்கணக்கான மக்கள் இவ் நினைவெழுச்சிநிகழ்வில் கலந்துக்கொண்டு தமிழரின் தாகம் தமிழீழதாயகமே எனும் உறுதியோடு கலந்துக்கொண்டனர்.






0 Responses to யேர்மனி பேர்லினில் நடைபெற்ற முத்துக்குமாரின் வணக்க நிகழ்வுகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com