நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கு டென்மார்க்கில் இருந்து மூன்று பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடாத்தப்படவுள்ள தேர்தலில் 4 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வேட்டுமனுத் தாக்கல் காலம் நேற்று வெள்ளிக்கிழமை (23.04.2010) முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான டென்மார்க் தேர்தல் ஆணையத்தினால் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களின் விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.டென்மார்க்கில் ஈழத்தமிழர்களின் குடிசனப்பரம்பலைக் கருத்திற் கொண்டு அங்கிருந்து நாடு கடந்த அரசாங்கத்திற்கு தெரிவு செய்யப்படவேண்டிய 3 பிரதிநிதிகளில் 1 பிரதிநிதி Sjælland பிராந்தியத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி Syddanmark பிராந்தியத்திலிருந்தும் 1 பிரதிநிதி மத்திய மற்றும் வட பிராந்தியங்களைப் பிரதிநிதித்தும் வகையிலும் தெரிவு செய்யப்படுவர்.
டென்மார்க்கிலிருந்து பின்வரும் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்:
தொகுதி 1: சுகேந்தினி நிமலநாதன்
தொகுதி. 2: றிமோன் வோசிங்டன்
தொகுதி. 3: இளையராஜ் கண்னன் சிதம்பரநாதன் மற்றும் மகேஸ்வரன் பொன்னம்பலம்.
வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டு ஒழுங்கு செய்யப்படவுள்ள அறிமுகக்கூட்டம் தொடர்பான விபரங்கள் டென்மார்க் நாடு வாரியான செயற்பாட்டுக் குழுவினால் பின்னர் அறியத்தரப்படும்.
டென்மார்க் முழுவதிலுமாக 30 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடாத்துப்படவுள்ளமை குறிப்பிடத்துக்கதாகும். தேர்தல் தொடர்பான மேலதிக தகவல்களை http://tamilvalg.dk/tgte எனும் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.



0 Responses to நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்: டென்மார்க்கில் 4 வேட்பாளர்கள் போட்டி