பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க ஒருங்கினைப்பாளர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம்-பொதுக்கூட்டம் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 4.50க்கு முடிந்தது.
இந்த பொதுக்கூட்டத்தில் சீமான், ‘’என் தம்பி முத்துக்குமார் தியாகத்தை வென்றவன். அவன் நாட்டில் வாழ்ந்ததை விட காட்டிலும்,சிறையிலும் வாழ்ந்ததுதான் அதிகம்.
அந்த தம்பி மீதுதான் ரத்த பொட்டலம் மருந்துகள் கடத்தியதாக வழக்கு போடப்பட்டிருக்கிறது. அதுவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடத்தியதற்கு இப்போதுதான் வழக்காம். அவன் கடத்தவில்லை; கொடுத்தான்.
ஆனால் இந்திய நாடு தமிழனின் உயிரை அல்லவா எடுக்க ஆயுதம் கொடுத்தது. அடிபட்டு காயம்பட்ட தம்பிகள் என்னை தொடர்பு கொண்டு கை, கால்கள் இழ்ந்துவிட்டோம். மருந்துகள் இல்லாமல் அழுக்கொண்டிருக்கிறோம்.
முடிந்தால் மருந்துகள் வாங்கி அனுப்புங்கள்; இல்லையென்றால் சயனைடு கடித்து சாகிறோம் என்று சொன்னார்கள். அது என்னால் அந்த சமயத்தில் முடியவில்ல. என் தம்பி முத்துக்குமார் செய்திருக்கிறார்.
மருந்து கிடைக்காத பல தம்பிகள் சயனைடு கடித்து செத்து மாண்டார்கள். அரிசியும் மருந்தும் வாங்க வந்த எனது ஈழத்து பிள்ளைகளை பிடித்தனர். அவர்களிடம் பிடிங்கிய பணம் எங்கே?
2016ம் ஆண்டுதான் நமது இழக்காக இருந்தது. ஆனால் இப்போதும் கொடுக்கப்படும் நெருக்கடி. அதற்கு முன்பே நுழைய வாய்ப்பு கொடுக்கிறது.
அண்ணன் பிரபாகரன் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? தமிழகத்தில் ஒரே ஒரு வீரன் இருந்தான் வீரப்பன் என்று. அவனையும் கொன்றுவிட்டீர்களே நியாயமா என்று கேட்டார்.
வீரப்பனை விசம் வைத்து கொன்று அதன்பிறகு சுட்டுக்கொன்றதாக மெடல் வாங்கிய போலீஸ் தமிழ்நாடு போலீஸ்.தமிழனுடை பண்பாட்டு மரபுகளை வீரப்பன் மதித்திருந்தான். மது, மாது, சூது, புகை என்று அவன் எதையும் நாடியதில்லை. அப்படி இருந்ததால்தான் நாகப்பாவை கடத்தியவன் நடிகையை கடத்தவில்லை.
ஒரு தமிழன் எந்த ஒரு சிங்களப்பெண்ணின் தாவணியை தொட்டதுண்டா. ஆனால் அவன் இறந்த ஒரு தமிழச்சியை வன்புணர்ச்சி செய்தானே யாராவது கேட்டதுண்டா? ’’என்று ஆவேசமாக பேசினார்.



0 Responses to ஒரே ஒரு வீரன் வீரப்பனையும் கொன்றுவிட்டீர்களே: சீமானிடம் தேசியத் தலைவர்