Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடிய தமிழ் இளையோர் அமைப்பு கடந்த வர இறுதி நாளில் தமிழ் மக்களுடான சந்திப்பை ஏற்பாடு செய்து இருந்தது கனடிய தேசியக்கொடி மட்டும் தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பம் ஆனது

தமிழ் மக்களிடையே தற்போது நிலவும் காலமட்டதில் தமது நிலைப்பாடு தொடர்பாக தமிழ் மக்களுக்கு விளக்கும் முகமாகவும்.

கடந்த ஆண்டு ஸ்ரீலங்கா அரசங்கத்தால் படுகொலை செய்யப்பட்ட கொடிய படுகொலைகளை நினைவு கூரும் முகமாகவும், இப்படுகொலைகளை உலகுக்கு வெளிக்காட்டுமுகமாகவும் உலகளாவிய அளவில் நினைவு நிகழ்ச்சிகள் நடாத்தப்படவுள்ளன.

இதன்படி கனடா நாட்டில் மக்களை ஒன்று திரட்டி பாரிய போராட்டங்களை கடந்த ஆண்டு நடாத்திய கனடா தமிழ் இளையோர் அமைப்பு ரொறொன்ரோ, கனடா நகர விழிப்புணச்சிகள் சம்பந்தமான பொதுக்கூட்டமொன்றையும் அதனைத்தொடர்ந்த கலந்தாலோசனைக் கூட்டத்தையும் ஒழுங்கு செய்திருந்தது.

இக்கூட்டத்தின் முடிவில் மக்கள் மற்றும் இளையோரின் ஆலோசனைப்படி, கனடா நாட்டில் மே மாதம் 1 திகதி ல் திகதி இருந்து 18 திகதி வரை பல்வேறுபட்ட நினைவு நிகழ்ச்சிகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடாத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ் நிகழ்வில் நூற்றுக் கணக்கான மக்கள் மற்றும் இளையவர்கள் கலந்துகொண்டார்கள் இளையவர்களின் எழுச்சிஉரையும் இடம்பெற்றது

முள்ளிவாய்க்கால் படுகொலை ஊடாகவோ மக்களை வதை முகாம்களுக்குள் போட்டுக் கொடுமைப்படுத்துவதாலோ தமிழ் மக்களுக்குள்ள சுதந்திரப் பசியை எந்தச் சக்தியாலும் அடக்கமுடியாது என்ற கூற்றை உலகுக்கு ஒற்றுமையாக எடுத்துக்கூற அனைவரையும் ஒன்று திரள்வோம்!.

கனடிய தமிழ் இளையோர்.





0 Responses to கனடிய தமிழ் இளையோர் அமைப்பு மக்களுடான சந்திப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com