Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் எமது உரிமைகளை ஜனநாயக வழிமுறைகளில் பெற்றுக்கொள்வதற்காகப் பெரிதும் முயற்சிகள் மேற்கொண்டுவரும் இன்றைய சூழலில் வவுனியாவில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அண்மைய காலமாக நடைபெற்றுவரும் சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையின் முழு விபரம் வருமாறு,

தேர்தல் நடந்து முடிந்த கையுடன் வவுனியாவில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் பொதுமக்களைப் பெரிதும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளன.

கடந்த 20ஆம் திகதி வவுனியா திருநாவற்குளத்தில் உள்ள ஒருவீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் மகாவித்யாலயத்தில் நான்காம் தரத்தில் கல்விபயின்று வந்த தனுஷா என்னும் ஒன்பது வயதுச் சிறுமி ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அப்பெண்ணின் தாயார்; மகாஇறம்பைக்குளம் ....பாடசாலை ஆசிரியை திருமதி. கௌரியாம்பிகை நெஞ்சிலும் வயிற்றிலும் கத்துக்குத்துக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் வவுனியா பொது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றார்.

மேற்படி சம்பவமானது மாணவர் சமுதாயத்தினரையும், ஆசிரிய சமூகத்தினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த சிலதினங்களில் 22.04.2010 அன்று வவுனியா தனியார் பஸ்தரிப்பிடத்தில் பேருந்திற்காக நின்றுகொண்டிருந்த பெண் பயணியிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறிப்பதற்கான முயற்சியும் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் பொதுமக்கள் கள்வனைப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வந்த 28 வயதுடைய ஒருவர் 24.04.2010 அன்று வவுனியா பெர்துமருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த வேளையில் பத்து லட்சம் ரூபாய் கப்பம் கேட்டு கடத்திச்செல்லப்பட்டார். பின்னர் பொலிசாரின் நடவடிக்கையினால் கடத்தப்பட்டவர் வவுனியா, 10வரசங்குளம் பகுதியிலிருந்து மீட்;கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அமைச்சரின் கட்சியைச் சார்ந்தவர்களாகவும், அரசிற்கு ஆதரவு வழங்கும் கட்சியின் உறுப்பினர் களாகவும் உள்ளனர் என்பது பொலிசாரின் விசாரணையிலிருந்து தெரியவருகின்றது.

இவைகளுடன் தொடர்புடையவரகள் யார் என்பது பொதுமக்களுக்கும் நன்கு தெரியும். பல்வேறு அனர்த்தங்ளினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள எமது மக்கள் சொல்லொனாத் துன்பங்களிலிருந்து தம்மை விடுவிப்பதற்கு யாராவது முன்வரமாட்டார்களா என்று ஏங்கித்தவிக்கும் இச்சூழலில் இத்தகைய சம்பவங்கள் எமது மக்களை விரக்தியின் விளிம்பிற்கே தள்ளியள்ளன.

இதுவரை நடந்துள்ள கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கப்பம் தொடர்பான சம்பவங்களில் வர்த்தகர்கள், மருத்துவர், அதிபர், கிராமசேவகர், தனியார் பேருந்து உரிமையாளர், முச்சக்கசரவண்டி உரிமையாளர், தனியார் கலவி நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பலர் காணாமல் போயுள்ளனர். மேலும் பலர் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பலலட்சம் ரூபாய்களைக் கொடு;த்து இன்று பெரும் கடனாளிகளாககவும் தொழிலைத் தொடர முடியாதவர்களாகவும் உள்ளனர்.

சிலர் இவர்கள் கேட்ட தொகையைக் கொடுக்க முடியாமல் தொழில், வர்த்தகம், வீடுவாசல்களைக் கைவிட்டு நாட்டைவிட்டே ஓடிப்போய்விட்டனர்.

இவைகளுக்கு ஒரு முடிவுகிட்டாதா@ இவைகளை யாரிடம் சொல்லி முறையிடுவதுமரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகிவிட்டதேஎன்று மக்கள் தங்களைத் தாங்களே நொந்துகொண்டுள்ளனர்.

நாம் எமது உரிமைகளை ஜனநாயக வழிமுறைகளில் பெற்றுக்கொள்வதற்காகப் பெரிதும் முயற்சிகள் மேற்கொண்டுவரும் இத்தருணத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இனியாவது இச்சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட தலைமைகள், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் தமது தொண்டர்களை வெளியேற்றி அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை பகிரங்கமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.தொடர்ந்தும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எமது மக்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

என்றும் சிவசக்தி ஆனந்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 Responses to வன்னிப்பயங்கரங்களை தடுத்துநிறுத்துமாறு சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com