எம்தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள் வரிசையில் மேஜர் காந்தரூபனும் ஆகுதி ஆகினார். அவரின் நினைவாக பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பினர் வருடம் தோறும் நடாத்திவரும் நிகழ்வுகளின் வரிசையில் இன்று இன் நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வு பிரான்ஸ் தமிழர்விழையாட்டுத்துறையின் ஆதரவுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மேஜர் காந்தரூபன் திருவுருவப்படத்திற்கு, கட்டை அடம்பன் பிரதேசத்தில் நேரடிமோதலில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட வீரவேங்கை செல்வக்கதிரின் தந்தையார் ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார்.
அதனைத்தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ் போட்டிகளில் உதைபந்தாட்டம், துடுப்பெடுத்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற போட்டிகள் இடம்பெற்றன. உதைபந்தாட்டத்தில் 24 கழகங்கள் பங்குபற்றியிருந்தன. இறுதிப்போட்டியில் ஈழவர்விளையாட்டுக்கழகமும், கிறீன் கின்ஸ் விளையாட்டுக்கழகமும் எதிர் எதிர் போட்டியிட்டனர்.
போட்டியின் இறுதியில் மேஜர் காந்தரூபன் நினைவாக இடம்பெற்றப்போட்டியில் 1ம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை ஈழவர் விளையாட்டுக்கழகம் தட்டிச்சென்றார்கள். 2ம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை கிறீன் கின்ஸ் விளையாட்டுக்கழகம் தட்டிச்சென்றார்கள். 3ம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் தட்டிச்சென்றார்கள்.
துடுப்பெடுத்தாட்டப்போட்டியில் 16 கழகங்கள் பங்குபற்றியிருந்தனர். இறுதிப்போட்டியில் தமிழர் விளையாட்டுக்கழகம் 93 விளையாட்டுக்கழகமும், ய+னைற்றேட் விளையாட்டுக்கழகமும் எதிர் எதிர் போட்டியிட்டனர். போட்டியின் இறுதியில் தமிழர் விளையாட்டுக்கழகம் 93 விளையாட்டுக்கழகம் 1ம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தையும், ய+னைற்றேட் விளையாட்டுக்கழகம் 2ம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தையும் தட்டிச்சென்றார்கள்.
கரைப்பந்தாட்டப்போட்டியில் 7 கழகங்கள் போட்டியிட்டனர். இறுதிப்போட்டியில் இழந்தென்றல் விளையாட்டுக்கழகமும் நிய+ ஸ்ரார் விளையாட்டுக்கழகமும் எதிர் எதிர் போட்டியிட்டனர். இறுதியில் 1ம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை இளந்தென்றல் விளையாட்டுக்கழகம் தட்டிச்சென்றார்கள். 2ம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை நிய+ ஸ்ரார் விளையாட்டுக்கழகமும் தட்டிச்சென்றார்கள்.



0 Responses to பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் ஏற்பாட்டில் காந்தரூபன் நினைவாக போட்டிகள் இடம்பெற்றது