Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான திருமதி வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளை இந்தியாவும், கனடாவும் நிராகரிக்கும் பட்சத்தில் மீண்டும் அவர் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தற்போது மலேசியாவில் தங்கியிருக்கும் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் விஸா எதிர்வரும் மே மாதம் 16ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது என்றும் சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டார்.

கனடா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் பார்வதி அம்மாளின் விஸா விண்ணப்பத்தை நிராகரிக்கும் சந்தர்ப்பத்தில் தான் மலேசியா சென்று, அவரை கொழும்புக்கு அழைத்து வந்து, அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to தேசியத் தலைவரின் தாயாரை இந்தியாவும், கனடாவும் நிராகரித்தால் நாடு திரும்புவார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com