Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் துணை இராணுவக்குழுவினரால் 2005 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவிலாளர் சிவராமின் (தராகி) ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் வியாழக்கிழமை (29) லண்டனில் கொண்டாடப்படவுள்ளது.


இந்த நிகழ்வில் சவுத் கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் மார்க் விராக்கர், மனித உரிமைகள் விவகார வழக்கறிஞர் லி கரு கியூ சி, பி.பி.சியின் தமிழ் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம், தமிழ் கார்டியன் வாரஏட்டின் ஆசிரியர் வினோ கணபதிப்பிள்ளை ஆகியோர் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலம்: வியாழக்கிழமை (29. 04. 2010), மாலை 6.30 – 9.30.

இடம்: Conway Hall

25 RedLion Square

WC1 R4RL London

United Kingdom

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 Responses to லண்டனில் சிவராமின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் வரும் வியாழக்கிழமை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com