Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலை என்பது ஒரு தேசியக்கடமை இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய நெருக்கடியால் பிறக்கு துன்பத்தை முழுத்தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழீழ தேசியத்தலைவர்.

தமிழீழ தேசத்தை காக்கும் போராட்டம் ஒரு சனநாயக போராட்டமாக 1948 லிருந்து உருவெடுத்து தமிழீழ மக்களின் சனநாயக உரிமைகளை பாதுகாக்கும் போராட்டமாக வடிவெடுத்த அந்த போராட்டம்இ அதிகாரவர்க்கத்தின் அடக்கு முறையி;ன் உச்சகட்டத்தில் அரசும் அதன் உறவு நாடுகளுடன் சேர்ந்து இந்த மக்களின் சனநாயக உரிமைகளை பயங்கரவாதம் என்ற போர்வையில் அழித்து இன்று எம் மக்கள் சனநாயக உரிமையற்றவர்களாக சிறைக்கைதிகளாக சிங்கள இனவாத அரசியலில் பேசமுடியாதவர்களாக சனநாயகத்தின் மேல் நம்பிக்கையற்றவர்களாக, இப்போது தாயகத்தில் தம்மைச்சுற்றியுள்ளவர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் நம்பிக்கையற்றவர்களாக காணப்படுகின்றார்கள்.

எமது இலட்சிய தமிழீழம் சாதி,சமய, பிரதேச வேறுபாடற்ற சமதர்ம தமிழீழத்தை அடையவே எமது இளைஞர்களும், அவர்கள் பின்னால் மக்களும் அணிதிரண்டு கொண்டகொள்கையில் உறுதியாய் நின்று ஒவ்வொரு மானமுள்ள தமிழனும் தமது இலட்சியமான தமிழீழ தேசத்திற்காக தம்மை குருதியால் குளிப்பாட்டி, தம்முயிரை மண்ணுக்கு வித்தாக்கியுள்ளனர்.

சர்வதேசத்தில் செப்ரெம்பர் 11க்கு பின் உருவான பூலோக அரசியல் மாற்றத்தினால் எமது இலட்சிய கனவுகள், எமது இனிய தாயகம் பேரழிவின் மூலம் சிதறடிக்கப்பட்ட நிலையில் இன்று எமது போராட்டம் சனநாயகப்போராட்டமாக, இவ்வுலகிற்கு போராட்டத்தின் சனநாயகத்தை வலியுறுத்துவதற்கு புது வடிவம் பெற்றுள்ளது. அந்த புதுவடிவங்களாக நாடுகள் வாரியாக உருவாகும் தமிழீழ மக்கள் பேரவைகளும், மக்கள் அவைகளும், தேசிய அளவில் செயற்படப்போகின்ற நாடுகள் கடந்த அரசையும் நாம் பார்க்கின்றோம். இந்த மாற்றத்தை நாம் மக்களுக்கு இலகுவாக விளங்கப்படுத்த வேண்டும் என்றால் உதாரணமாக ஐரோப்பாவில் உள்ள ஐரோப்பிய யூனியனை எடுத்துக்கொள்ளலாம் இந்த ஐரோப்பிய யூனியன் அதன் அங்கத்துவ நாடுகளாகிய 27 நாடுகளின் ஓர் அரசு. அந்த அரசின் தாய்க்கட்டமைப்பாக அவ் 27 நாடுகளும் இருக்கின்றன. அதைப்போலவே தான் எமது நாடுகடந்த அரசையும் நாம் பார்க்கின்றோம்.

ஆனால் இன்று எமது போராட்டம் மிகப்பலம்வாய்ந்த கட்டமைப்புகளாக மாறி நாம் இதுவரை ஏற்படுத்தாத அரசுகளின் உறவுகளை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்களை, மக்கள் பேரவைகள் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் எமது நாடுகடந்த அரசையும் வலுப்படுத்தும் செயற்திட்டங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் எமது இலட்சிய தமிழீழ கனவை சிதறடிக்கவும் செயற்பாடுகளிலும், தன்தேசமக்களுக்காக தம்மை உறுத்தி உழைத்தவர்களையும், உழைத்துக்கொண்டிருப்பவர்கள் மீது வன்மம் தீர்பதும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தனியே நிலம் மீட்கும் போராட்டமாகவல்லாது எமது மக்களில் மனங்களில் புரையோடிப்போயிருந்த சாதி, சமயம், பிரதேச வேறுபாடுகளுக் கெதிரானதாகவும் போராட்டமாகவும் அமைந்திருந்திருந்ததும் அவைகள் யாவும் விலைமதிக்க முடியாத உயிர் அர்பணிபால் தாயகத்தில் இல்லாதொழிக்கப்பட்டவைகள் இன்று மீண்டும் புலம்பெயர் மண்ணில் தலையெடுக்க தொடங்கியுள்ளன. சிறீலங்கா அரசானது எமது போராட்டத்தை அழித்து விட கண்ணும் கருத்துமாக இருக்கும் நிலையில் மீண்டும் எம்மிடையே பிரிவினைவாத அரசியலை தூண்டும் அரசியல்வாதிகளை தாயகத்திலும் சிலரை புலத்திலும் நாம் காண்கின்றோம். இவற்றை நாம் எமது போராட்டத்தின் புதிய வடிவங்களை அழிக்க முற்பட்டிருக்கும் சிங்கள அரசின் செயற்திட்டமாவே நாம் பார்க்க வேண்டியுள்ளது.

ஆகவே புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களுக்கு தாய்நாட்டு மக்களுக்கும் நாம் விடுக்கும் தாழ்மையான வேண்டுகோள் நாம் சமதர்ம சமத்துவ தமிழீழத்தையே கட்டியெழுப்பவே எமது மண்ணின் மானவீரர்கள் 40.000 பேர் தம்மை தன்தாய் மண்ணிற்கு உரமாக்கினார்கள். 2லட்சம் வரையிலான எமது மக்கள் பலியெடுக்கப்பட்டார்கள். எதிரியால் கோழைத்தனமாக பழிதீர்க்கப்பட்டார்கள். கொண்ட கொள்கையில் கிஞ்சித்தும் பிறலாது தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகமே என்ற தாரகமந்திரத்தை முள்ளிவாயக்காலில் வரலாறு படைத்துச்சென்ற எமது வீரத்தளபதிகளும், இலட்சிய தமிழீழத்தில் நம்பிக்கை கொண்டு கடசிவரை நின்ற மக்களும் போராளிகளும், 40 ஆயிரம் அரசபயங்கரவாத்திற்கு பலியானார்கள்.
ஆகவே மீண்டும் சிலரின் சுயநல தேவைகளுக்காக இனப்பரிவினைவாதஇ பிரதேசவாத அரசியலில் சிக்கி உருவாகியிருக்கும், உருவாகும் செயற்திட்டங்களை அழித்து விடாதீர்கள்.
மக்காளாகிய நாம் ஒன்றாக தாயகத்தில் உள்ள மக்களுக்கு மனவலிமையைக் கொடுத்து எமது உரிமைகளை மீண்டும் நிலைநாட்ட ஒன்றாக போராடுவோம்.

~பிரிவினைவாதம்~ என்பது தவறான சித்தாந்தம். இதனை எங்கள் போராட்டத்திற்குப் பிரயோகிக்க முடியாது. எங்கள் இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தேசிய விடுதலைக்காக நாங்கள் போராடி வருகிறோம்.

தமிழீழ தேசியத்தலைவர்.

திருச்சோதி திருக்குலசிங்கம்

நாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் வேட்பாளர்.

0 Responses to எங்கள் தமிழீழ தேசம்……..ஒரு வேட்பாளரின் பார்வை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com