இக்குறிப்பிட்ட இருவரும் ஆயுதங்கள் சகிதம் இப்பகுதியில் நடமாடியதாகவும் நீதவானின் வீட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்டதாகவும் பொதுமக்களால் கடிதங்கள் மூலம் சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு தகவல் அனுப்பியிருந்ததாகவும் இதனை விசாரணைக்கு இன்று எடுத்துக்கொண்ட நீதிபதி பிரபாகரன் இதுதொடர்பான விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதுமட்டுமல்லாமல் ஈபிடிபி அமைப்பின் செயலர் நாயகம், யாழ் அரச அதிபர், யாழ்மாவட்ட இராணுவதளபதி, நீதிஅமைச்சின் செயலாளர் மாவட்ட காவல்துறை அத்தியேட்சகர் ஆகியோருக்கும் உரிய தகவல் வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கப்பம்கோரி கடத்தப்பட்ட கபில்நாத் அவர்களின் விசாரணைகளை முடக்கவே இக்கொலை முயற்சி இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரியவருகிறது.
நீதிபதி பிரபாகர் கபில்நாத் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜீவனை கைதுசெய்யுமாறும் அவரை நாட்டை விட்டு வெளியேறாதபடியும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஜீவன் என்பவர் ஈபிடிபி ஐசேர்ந்தவர் என்பதுவும் கடந்த எட்டு வருடங்களாக நுணாவில் ஈபிடிபி முகாமில் இருந்து வந்தவர் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த அலுவலகத்திற்கு பொறுப்பாக சாள்ஸ் என்பவர் இருந்து வந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை டக்லஸ் தேவானந்தா அவர்கள் தமது அமைப்பிற்கு இக்கடத்தல் கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என வழக்கம்போல ஊர்அறிந்த உண்மையை மூடிமறைத்துள்ளார்.



0 Responses to நீதிபதியிற்கு ஈ.பி.டி.பியினர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்