தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய தூதுவருக்கும் இடையில் இன்று சந்திப்பு நடைபெறவுறள்ளது.இந்திய தூதுவர் அசோக் கே காந்தின் அழைப்பின் பேரின் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குமான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் மத்தியஸ்த முயற்சின் முதல் கட்டமாகவே இந்த சந்திப்பு இந்திய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்து அங்குள்ள கொள்கை வகுப்பாளர்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய தூதுவருக்கும் இடையில் இன்று சந்திப்பு