சாவகச்சேரியில் கபில்நாத் என்ற மாணவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஈபிடிபியின் சாவகச்சேரி பொறுப்பாளர் சாள்ஸ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இன்று இவர் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.யாழ். ஊடகவியலாளர்களை நேற்றிரவு சந்தித்த போது யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க இதனைத் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த மாத முற்பகுதியில் பெருந்தொகை பணத்தினை கப்பகமாக கோரி சாவகச்சேரியில் பிரபல வர்த்தகர் ஒருவரது மகன் கடத்தப்பட்ட நிலையில் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டு, கடத்தல்காரர்களில் ஒருவரென சந்தேகிக்கப்படும் ஒருவரது வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.
இந்தக் கடத்தல் மற்றும் படுகொலை தொடர்பாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று சாள்ஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்திருகின்றார்.
நேரம், இந்தப் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சாவகச்சேரி நீதிபதியின் வீட்டுப் பகுதியில் கடந்த சில தினங்களாக ஆயுததாரிகள் சிலர் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து சுற்றித் திரிந்தாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இது குறித்து பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிபதி கோரும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to ஈபிடிபியின் சாவகச்சேரி பொறுப்பாளரும் கைது