Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலின் முடிவுகள் இன்னும் சில மணித்தியாலங்களில் வெளிவரவுள்ளன. வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது.

பிரித்தானிய தலைநகர் லண்டன் றெய்னஸ் லேனில் உள்ள சொரஸ்ரீயன் சென்ரர் மண்டபத்தில் பெருந்திரளான மக்கள் முன் இந்த வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

வரலாற்று சிறப்பு மிக்க இத்தேர்தலின் முடிவுகளை அறிய மக்கள் இரவுனேரம் என்றும் பாராது வந்து ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்று காலை 8:00 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 9:00மணிக்கு நிறைவு பெற்றது. பிரித்தானியா முழுவதுமாக 42 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்களிப்புகளை கணக்கிடிவதற்காக அனைத்து நிலையங்களிலும் இருந்து லண்டனில் உள்ள இந்த மண்டபத்திற்கு பாதுகாவலரின் உதவியுடன் கொண்டுவரப்பட்டே இங்கு வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலநிலை சரியில்லாது நாள் முழுதும் அடைமழை பெய்த போதிலும் கணிசமான மாக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்குகளை அளித்துள்ளதாகவே வாக்களிப்பு நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to பிரித்தானியாவில் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com