சிறீலங்காவின் எதிர்கட்சிதலைவர் இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளில் ஒன்று சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்வது ஆகும் என தெரிவித்துள்ளார்.இதேவேளை பொன்சேகா அவர்கள் ஏ.எவ்.பி செய்தி சேவையிடம் போர்குற்றம் தொடர்பில் விசாரணை நடாத்துபவர்களிடம் தனக்கு தெரிந்த அனைத்தையும் வெளிப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எனது வழிமுறைகளுக்கு அப்பாலும் சென்று யார் யார் போர்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிப்படுத்துவேன் எனவும் நான் யாரையும் பாதுகாக்க முற்பட மாட்டேன் எனவும் பெரியவர் முதல் சிறிய பதவி வகிப்பவர் வரை போர்குற்றங்களில் ஈடுபட்டவர்களை வெளிப்படுத்துவேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். தமிழ் இளைஞர்களை அநியாயம் இழைத்தவர்களை பாதுகாப்பது தேசப்பற்று அன்று என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு சரத்பொன்சேகா அவர்கள் செல்வதை அனுமதிக்காமல் இருப்பது அவரது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலாகும் பாராளுமன்றத்திற்கு செல்வதை தடுக்கும் உரிமை இராணுவ நீதிமன்றத்திற்கு கிடையாது எனவும் இராணுவச்சட்டம் பாராளுமன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தின்கீழ் இயங்குவது எனவும் அதற்கு இவ்வாறு செல்வாக்கு செலுத்தும் அதிகாரம் கிடையாது எனவும் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பொன்சேகா அவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதனை ஒரு விடயமாக கருதி கடந்த புதன்கிழமை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விவாதித்ததாக தெரியவருகிறது.



0 Responses to ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை பெறவேண்டுமாயின்; பொன்சேகாவை விடுவிக்க வேண்டும்