தேர்தல் காலங்கள் கடந்து விட்டன. ஆயினும் நீங்கள் அச்சடித்து வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனங்கள், துண்டுப்பிரசுரங்கள், பத்திரிகை விளம்பரங்கள் அத்தனையும் எம்மிடம் ஆவணமாகவுள்ளன. உரிய நேரத்தில் அவற்றை பிரசுரித்து உங்களுக்கும் மக்களுக்கும் நினைவுபடுத்தும் திட்ட மொன்றும் எம்மிடம் உள்ளதென்பதைத் தெரி வித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
பேச்சுக்கள், காரசாரமான அறிக்கைகளுடன் உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மட்டுப் படுத்தப்படுமாயின் அது தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரும் அநீதியாகும். எனவே களத்தில் இறங்குங்கள். மக்களைத் தேடிச் செல்லுங்கள். அவர்கள் மீது அன்பு செலுத்துங்கள். அவர்களோடு சேர்ந்து திட்டமிடுங்கள். செயற்படுத்துங்கள். அப்போதுதான் மக்கள் மறைமுகமாக அனு பவிக்கின்ற அரசியல் துன்பங்கள் வெளிவரும்.
ஆம், அரச மரத்தடியில் புத்தர் சிலை, முறி கண்டியில் தென்பகுதி மக்களுக்கான காணி ஒதுக்கீடு, காங்கேசன்துறை மற்றும் மாவிட்டபுரத்தில் கல் அகழ்வு, ஏ-9 வீதி எங்கும் தென்பகுதி உணவகங்கள். கொழும்பு-யாழ் வீதியூடாக இரவுநேர பஸ் பயண இருட்டில் நடக்கும் வேதனை சம்பவங்கள் எனப்பலதும். ஆகவே அன்புக்குரிய யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே! மக்களைத் தேடிவாருங் கள்.
அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களை அறியுங்கள். அந்தத் துன்பப் பட்டியலுடன் கட்சி பேதமின்றி பொது இடமொன்றில் கூடுவோம். எங்கள் துன்பத்தை எப்படி நீக்கலாம் என்று ஆய்வு செய்வோம்; திட்டமிடுவோம்; பகிரங்கப் படுத்துவோம்; செயல்வழிப்படுத்துவோம்; இது விடயத்தில் நீங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். உரிமை கேட்ட நாம் இப்போது சில்லறைப் பிரச்சினைகள் பலவற்றை எதிர்கொண்டுள்ளோம்.
இவை உடனடியாக நீக்கப்பட வேண்டும். புதிய பிரச்சினைகள் உருவெடுக்காமல் நாம் உசார் நிலையில் இருப்பதும் அவசியம். எங்கே பார்க்கலாம். - வலம்புரி ஆசிரியர் தலையங்கம் தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்களை முன்வைத்தே நீங்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றீர்கள்.
எனவே உங்கள் பதவிக் காலத்தின் பெரும்பகுதியை யாழ்ப்பாணத்தில் செலவிடுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. தேர்தல் காலத்தில் நீங்கள் எங்ஙனம் வீடு வீடாகச் சென்று கூப்பிய கரத்தினராய் மக்களைச் சந்தித்தீர்களோ அந்தச் சந்திப்பை பதவிக்குப் பின் நிறுத்தி விடாதீர்கள்.
வலம்புரி.



0 Responses to யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு பகிரங்க மடல்