வன்னி பேர்குற்றங்களை மறைக்கும் செயற்பாடுகளில் ஸ்ரீலங்கா அரசின் செயலகங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வன்னியில் இறுதிப்போர் நடவடிக்கையில் ஸ்ரீலங்காப்படையினரால் கொத்துக்குண்டுகள், இரசாயன குண்டுகள், மற்றும் கனரக பீரங்கி தாக்குதல்கள் நடத்தி மக்கள் மீதான படுகொலையினை நடத்தின.
இன்நிலையில் வன்னியில் இறுதியில் உயிரிழந்த மக்களுக்கான மரண சான்றிதழ்; வழங்குவதில் இளுத்தடிப்பு செய்துள்ள ஸ்ரீலங்கா அரச செயலாகங்கள்,தற்போது முள்ளிவாய்காலில் நான்காம் மாதத்திற்கு பின்பு உயிரிழந்தவர்களின் விபரங்களை அதற்கு முன்னான காலங்களில் உயிரிழந்துள்ளதாக நாள்குறித்து மரண சான்றிதள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஸ்ரீலங்கா அரசின் போர்குற்றவியல் வழங்கில் சாட்சியங்களாக இவர்கள் இருப்பார்கள் என்பதற்கு அமைவாகவும், மற்றும் இறுதி போர்நாட்களில் ஸ்ரீலங்காப்படையினர் கனரக பீரங்கிகளை பாவிக்கவில்லை என்று பன்னாடுகளுக்கு எடுத்துக்கூறுவதற்காகவே இவ்வாறான ஆதராங்களை வழங்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா அரசின் செயலகங்களுக்கு ஸ்ரீலங்காப்படைத் தலைமையினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to போர் குற்றங்களை மறைக்கும் செயற்பாடுகளில் சிறீலங்கா