Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும் என கனேடிய அமெரிக்க துணைத்தூதுவராலயம் முன்பாக தமிழ் இளையவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் இரண்டாம் நாளை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை வகை தொகையின்றி கொன்றழித்தது மட்டுமல்லாது, எஞ்சியவர்கள் கொடிய வதைமுகாம்களில் வைத்து படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.

எமது மக்களின் துயரங்களை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டும் முகமாவும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை போர் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும் என்றும் பதாதைகளை தாங்கியவாறு நின்றனர்.

இதன்படி ரொறன்ரோவில் உள்ள அமெரிக்க துணைத்தூதுவராலயம் முன்பாக கூடிய மக்கள் தமது கவனயீர்ப்பு நிகழ்வை தமது வாயில் கறுப்பு துணியால் கட்டியவாறு பங்குகொண்டனர். இவ் கவனயீர்ப்பு நிகழ்வு நாள்தோறும் மே 1 முதல் மே 19 வரை தொடந்து நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to போர் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும்: கனடிய தமிழ் இளையோர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com