அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜப்சவிற்கும் அவரின் சகோதரர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவர் இரு தடைவை மட்டுமே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்.
எனினும் அதனை மாற்றியமைப்பதற்கும் இலங்கையின் நிரந்தர ஜனாதிபதியாக தான் பதவி வகிப்பதற்கும் மகிந்த ராஜப்ச ஆலோசித்து வருகின்றார்.
அதற்கான சாத்தியங்களை ஆராயுமாறு சட்ட ஆலோசகர்களுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை காரணமாக பசில் ராஜபக்ச கடும் அதிர்ப்பதி
அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியின் இந்த பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் தான் ஜனாதிபதியாக வரும் நோக்கிலேயே அவர் இம்முறை பிரதமர் பதவியினை விட்டுக்கொடுத்திருந்ததாக கூறப்படுகின்றது.
எனினும் மகிந்த ராஜப்ச தற்போது மேற்கொள்ள தீர்மானித்துள்ள அரசியலமைப்பு மாற்றமானது தனது ஜனாதிபதி கனவினை குலைத்து விடும் என்பதால் அதனை தடுப்பதற்குரிய முயற்சிகளில் பசில் ராஜப்ச ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வேண்டிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மகிந்த ராஜபக்ச பெறுவதை தடுப்பதற்கா வியூகங்களையும் பசில் ராஜபக்ச தற்போது வகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் மகிந்த - பசில் முறுகல்