Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மேதினப் பேரணி: பேர்லின்

பதிந்தவர்: தம்பியன் 06 May 2010

01.05.2010அன்று பேர்லின் மாநகரில் ஏனைய பல்லின சமூகத்தினருடன் தொழிலாளர் அமைப்புகளுடன் இணைந்து பேர்லின் வாழ் தமிழ் மக்கள் கலந்துக்கொண்டனர்.

இப் பேரணியில் கலந்துக்கொண்ட தமிழ் மக்களால் தமிழீழத்தில் அல்லல்படும் மக்களின் அவலநிலையும் அடுத்து சிங்கள இனவெறி அரசின் இனஅழிப்பு முயற்சிகளையும் சிறப்பாக சென்ற ஆண்டு முள்ளிவாய்காலில் முடிவடைந்த இனஅழிப்பை முன்னின்று நடாத்திய ஜெகத் டீயஸிற்கு எதிரான துண்டுப்பிரசுரங்கள் பல்லின மக்களுக்காக வழங்கப்பட்டது.

அத்தோடு ஜெகத் டீயஸை பற்றிய பதாகைகளும் தமிழ் மக்களால் கொண்டு செல்லப்பட்டது.

மே தினத்தை முன்வைத்து யேர்மனி ரீதியில் 15க்கும் மேலான பல்வேறு நகரங்களிலும் தமிழ் மக்களால் இவ்வாறான கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மேதினப் பேரணி: பேர்லின்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com