இந்தியாவினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிப்பொருட்களை ஸ்ரீலங்கா அரசு சிங்கள மக்களுக்கு வழங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசினால் வன்னியில் இடம்பெயர்ந்து முட்கம்பிவேலி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கும், மற்றும் மீள்குடியேறிய மக்களுக்கும் என்று வடக்கு கிழக்கு பகுதிகளின் அபிவிருத்தி நடவடிக்கையினை மேற்கொள்ளும் நோக்கில் கட்டடபொருட்கள் உணவல்லா பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மக்களுக்கென வழங்கப்பட்ட பொருட்களை ஸ்ரீலங்காவின் சிங்கள அமைச்சர்கள் சிங்கள மக்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பல ஆயிரக்கணக்கா சீமேந்து பைகள் இந்தியாவினால் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.
இவைகள் சிங்கள மக்களின் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களுக்காக ஸ்ரீலங்கா அரசினால் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக பன்னாட்டு தமிழ் உறவுகளினால் கொண்டுசெல்லப்பட்ட வணங்காமண் கப்பலின் பொருட்களும் இடம்பெயர்ந்த மக்களுக்கு முழுமையா வழங்கப்படாமல் ஸ்ரீலங்கா அரசின் அதிகாரிகளினால் சூறையாடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



0 Responses to தமிழர்களுக்கான உதவிப்பொருட்களை சிங்கள மக்களுக்கு வழங்கும் சிறீலங்கா