வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள எள்ளங்குளம் துயிலும் இல்லம் சிங்கள இராணுவத்தினரால் கனரக வாகனங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.அண்மைக்காலமாக சிங்கள இனவெறி கூட்டத்தினால் தமிழர்களினுடைய உணர்வுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் தீவுப்பகுதியில் சாட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள துயிலும் இல்லமும், தென்மராட்சியில் உள்ள கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லமும் அழிக்கப்பட்டு இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் தமிழ் தேசியத் தலைவரின் இல்லம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதேபோல நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியும் அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
வெளிநாட்டவர்களின் போர்வீரர்களின் கல்லறைகளை அழிக்கக்கூடாது என்ற மரபை மீறி ஸ்ரீலங்கா படையினர் மிலேச்சத்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஈழத்தமிழர்கள் மத்தியில் வேதனையையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நடவடிக்கையால் ஈழத்தமிழர்கள் வேற்றுநாட்டவர்கள் என்பதை அவர்கள் நிரூபித்துக் காட்ட விரும்புகிறார்கள் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.



0 Responses to எள்ளங்குளம் துயிலும் இல்லம் அழிப்பு