வன்னியில் தாம் முன்னெடுத்த ஆக்கிரமிப்புப் போரின்போது தமது படைகள் எந்தவித போர்க் குற்றத்திலும் ஈடுபடவில்லை என, சிறீலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்செகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளைச் சுட்டுக்கொல்லுமாறு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்ச தனக்கு உத்தரவிடவில்லை எனவும், தமது படைகள் அவ்வாறு யாரையும் சுட்டுக்கொல்லவில்லை எனவும் அவர் மேலும் கூறியிருக்கின்றார்.
இது பற்றி ஊடகங்கள் தவறான தவலை வெளியிடுவதாகத் தெரிவித்த அவர், கடந்த வாரவிடுறைப் பத்திரிகை ஒன்றிலும், தனக்கு உத்தரவு வழங்கப்பட்டதாகத் தவறான தகவல் பரிமாறப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.
சிறீலங்கா அரசின் போர்க்குற்ற விபரங்களை வெளியிடப்போவதாக பகிரங்கமாக ஊடகங்களுக்கு அறிவித்த பின்னரே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அதே பொன்சேகா தற்பொழுது சிறீலங்கா அரசுக்கு அஞ்சி மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் பிரித்தானிய, நோர்வே அரசுகளின் ஏற்பாடுடன் வெள்ளைக் கொடியுடன் சிறீலங்கா படைகளுடன் சமரசம் பேசவென வெள்ளைக்கொடியுடன் சென்றிருந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளப் புலித்தேவன், மற்றும் நடேசனின் மனைவி ஆகியோர் சிறீலங்கா படைகளால் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்ததுடன், அந்த நிழற் படங்களை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சே வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



0 Responses to வன்னியில் போர்க்குற்றம் இல்லை, யாரையும் சுடவும் இல்லை: பொன்சேகா