Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

என் தமிழ் உறவுகளுக்கு க்கம்!

நாடு கடந்த அரசினை அமைப்பதற்காக நடைபெற்ற தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் தேர்தல் ணிகளில் ம்மை ஈடுபடுத்தியோருக்கும், எனது பிரச்சாரவேளைகளில் எனக்கு உதவியோருக்கும் எனது ன்றிகள்.

நாடு கடந்த தமிழீழ அரசு , அது உருவாக்கப்பட்ட நோக்கம் என்பவை புனிதமானவை. நாம் இழந்த தேசத்தை மீண்டும் தேடும் இந்த பயணத்தில் நாடு கடந்த அரசு ஒரு காத்திரமான பங்கினை ஆற்ற நீங்கள் தொடர்ந்தும் எம்மோடு இருப்பீர்கள் என்பது திண்ணம்.

என் மிழ் உறவுகளே!

இப்பணியில் நான் தங்களின் ஆணைக்கு உகந்தவாறு பணியாற்றுவேன் என நன்றியுடன் கூறிக் கொள்கின்றேன்.

தேசத்திற்காக ஆகுதிகளாகிய தீபங்களையும் , அனைத்தையும் இழந்து அனாதைகளாக நிற்கும் எமது உறவுகளையும் மனதில் நிறுத்தி , அந்த நினைவில் வாழும் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்.

நன்றியுடன்
கவிராச் சண்முகநாதன்.

0 Responses to வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com