உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற கடந்த மாதம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது முறையான அனுமதி இல்லை என குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர். இதையடுத்து அவருக்கு அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.
இந்நிலையில் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெறுவதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த 2003ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் தமிழக அரசால் தேர்வு செய்யப்படும் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும். அதற்கான செலவு மற்றும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதேபோல் சிகிச்சை முடிந்த பிறகு பார்வதி அம்மாள் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார் என்றும், இதற்கான கடிதத்தை தமிழக அரசுக்கு மத்திய அரசு விரைவில் அனுப்பி வைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



0 Responses to தேசியத் தலைவரின் தாயாருக்கு ஒரு வாரத்தில் அனுமதி?