இலங்கை தமிழர்களின் விவகாரம் குறித்து, நாளைய தினம் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியுடன், தமிழக முதல்வர் மு. கருணாநிதி கலந்துரையாடவுள்ளார். இந்தியாவின் செய்திசேவை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.மு.கருணாநிதி நாளைய தினம் புதுடில்லிக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்திக்கவிருப்பதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டீ கே எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புகளின் போது, இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் தீர்வு குறித்து முதல்வர் கலந்துரையாடுவார் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.



0 Responses to ஈழத்தமிழர் தொடர்பாக கருணாநிதி - சோனியாவை சந்திப்பாம்