ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை வைகை தொகையின்றி கொன்றழித்தது மட்டுமல்லாது, எஞ்சியவர்களை கொடிய வதைமுகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டுவருகின்றனர் .
கனடா தமிழ் இளையோர் அமைப்புடன், கனடா தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து இக் கொடிய படுகொலைகளை நினைவு கூரும் முகமாகவும், இப்படுகொலைகளை உலகுக்கு வெளிக்காட்டுமுகமாகவும் மே மாதத்தை ‘வலி சுமந்த மாதம்’ ஆக பிரகடணப்படுத்தி நினைவெழுச்சி நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன.
இதன்படி ரொறொண்டோ வில் உள்ள அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்பாக கூடிய மக்கள் தமது கவனயீர்ப்பு நிகழ்வை தமது வாயில் கறுப்பு துணியால் கட்டியவாறு பங்குகொண்டனர் இவ் கவனயீர்ப்பு நிகழ்வு நாள்தோறும் மே ௧ முதல் மே தொடந்து நடைபெறவுள்ளது எனபது குறிப்படத்தக்கது.
TYO Media – Canada



0 Responses to “வலி சுமந்த மாதம்” கவனயீர்ப்பு நிகழ்வின் முதலாம் நாள் (படங்கள் இணைப்பு)