Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் 2வது தடவையாக நடத்தும் லெப்ரினட் கேணல் தவம் நினைவு குறும்படப்போட்டியானது நடைபெறவிருக்கிறது.

எனவே இப்போட்டிக்கு யூன் 30ம் திகதி வரையும் இந்தியா, சிறிலங்கா தவிர்ந்த உலகெங்கும் வாழும் புலம்பெயர் படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பி வைக்க முடியும்.

எனவே மிக விரைவாக தங்களின் விபரங்களை எழுதி shortfilmfrance@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

தமிழீழ மக்களின் கலை, கலாசார,பண்பாட்டு விழுமியங்கள், தமிழர்களின் அடையாளங்கள் போன்றவற்றிற்க்கு குந்தகம் ஏற்படாத வகையில் எந்தவொரு குறும்படத்தையும் 23 நிமிடங்களுக்கு உட்பட்டு, வேறு எந்தப்போட்டிகளிலும் பங்குபற்றாதவையாகவும், இணையம் உட்பட எந்தவொரு ஊடகங்களிலும் வெளிவராதவையாகவும் உங்கள் குறும்படங்கள் இருத்தல் வேண்டும்.

ஒருவர் எத்தனை குறும்படங்களையும் ஆனுப்ப முடியும். விண்ணப்ப விரபரம். தயாரிப்பு நிறுவனம்இயக்குனர் பெயர்குறும்படத்தின் பெயர்பஙகுபற்றுகின்ற நாடுஎன்பனவற்றை எழுதி மிக விரைவாக படைப்பாளிகள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பிரான்ஸ் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் கேட்டுக்கொள்கின்றது.

0 Responses to லெப்ரினட் கேணல் தவம் நினைவு குறும்படப்போட்டி 2010 பிரான்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com