Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த பொதுத் தேர்தலில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட 14 இராணுவ அதிகாரிகளில் மூன்று பேரும் கட்சியின் மாவட்ட அமைப் பாளர்களாக பணியாற்றி வரும் 26 இராணுவ அதிகாரிகளும் ஜெனரல் சரத் பொன்சேகா வுக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதுடன் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரதான நிர்வாக அதிகாரி கப்டன் சஞ்சீவ கந்தன ஆராய்ச்சி, பொன்சேகாவின் இணைப்புச் செயலாளராக பணியாற்றிய கப்டன் திஸா நாயக்க, மேஜர் சமந்த கல்யாணரத்ன ஆகி யோர் ஜனநாயக தேசியக் கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்றுமுன்தினம் அறி வித்துள்ளனர்.

இது குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு 2இல் உள்ள நிப்போன் விடுதியில் இடம்பெற்றது. ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய இரா ணுவ அதிகாரிகள் 6 பேரும் தாம் விரைவில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.

இராணுவ அதிகாரி என்ற வகையிலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியதாக அவர்கள் கூறினர். ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தில் இருந்தபோது காணப்பட்ட அவரது நிலைப் பாடுகள் அரசியல் பிரவேசத்தின் பின்னர் மாற்றமடையும் என நாம் எண்ணினோம்.

எனினும் நிலைமை இன்னும் மாற்றமடையவில்லை. பொன்சேகா தற்போது இராணுவத்தினர் குறித்து பேசுவதில்லை. அவருக்கு ஆதரவு வழங்கிய எம்மை மறந்துள்ளனர். இராணுவத்தினரை எதிர்காலத்திலும் தேர் தல் சந்தையில் விற்க முடியாது என பொன் சேகா கூறுகிறார்.

நபர் ஒருவர் மற்றுமொரு கட்சியை ஆரம்பிப்பதை விட இராணுவத்தி னர் என்ற வகையில் நாட்டை மீட்பதற்காக ஒன்றிணைந்தோம். இராணுவத்தினருக்கும் நாட்டிற்கும் ஜனா திபதி மகிந்த ராஜபக்­வினால் ஏதேனும் மேற்கொள்ளப்படுகிறது என நாம் நம்புகி றோம்.

யுத்தத்தை செய்தது ஜெனரல் சரத் பொன்சேகா அல்ல பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­. இதனால் நாட்டில் உள்ள அனைவரும் கோத்தபாயவுக்கு கடன் பட்டுள்ளனர். பொன்சேகா இராணுவத்தின் தலைவராக முடிந்ததே தவிர அவரால் என்றுமே நாட்டின் தலைவராக முடியாது எனவும் பொன்சேகாவிடம் இருந்து பிரித்துள்ள இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to பொன்சேகாவுடன் இணைந்திருந்த 26 இராணுவ அதிகாரிகள் அரசுக்கு ஆதரவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com