மன்னிப்புச் சபையின் இலங்கை விவகாரங்கள் சம்பந்தப்பட்ட நிபுணரான ஜிம் மக்டொனால்ட் இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெவித்துள்ளதாவது:
ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்து 37 நாட்கள் ஆகிவிட்டன.
இருபது வருடகடூழியச் சிறைத் தண்டனையை ஆட்சேபித்து அவர் தாக்கல் செய்திருக்கும் மேன் முறையீட்டு வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்றும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அதற்குப் பின் சில நாட்களில் வழங்கப்படும் என்றும் சட்டமா அதிபரும் கூறியிருந்தார்.
இதன் காரணமாக திஸ்ஸநாயகத்தின் சட்டத் தரணிகள் மேன்றையீட்டு மனுவை கடந்த 31ஆம் திகதி வாபஸ் பெற்றனர்.
ஆனால் அவருக்கு இன்னும் ஜனாதிபதியின் பொது மன்னிப்புக் கிடைக்க இல்லை. ஏன் இந்தத் தாமதம்?
எனவே திஸ்ஸநாயகத்துக்கு பொதுமன்னிப்பை உடன் வழங்க வேண்டும் என்று சர்வதேச சமுகத்தைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரும் இலங்கை அரசை கேள்வி கேட்க வேண்டும்.
அப்போது தான் இவை எல்லாவற்றையும் உலகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் திஸ்ஸநாயகத்தக்கு பொதுமன்னிப்புக் கிடைக்கும் வரை சர்வதேசம் அதற்காகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் என்பதையும் இலங்கை உணர்ந்து கொள்ளும் என்றும் அவர் தெவித்துள்ளார்.



0 Responses to ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாதது ஏன்?