தமிழ் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இறுதி செய்த கூட்டமைப்பு அதற்கான அனைத்து ஆவணங்களையும் இன்று தேர்தல்கள் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாப்பு, கொள்கைப் பிரகடனம் என்பவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று தேர்தல்கள் திணைக்களதில் கையளித்துள்ளது. இதன் அடிப்படையில் கட்சியின் தலைவராக இரா சம்பந்தனும் இணைச் செயலாளர்களாக மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன் , செல்வம் அடைக்கலாதன் ஆகியோரும் இடம்பெறுவர்.
இன்று கட்சியினைப் பதிவு செய்வதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ள போதிலும் இங்கிலாந்து சென்றுள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாடு திரும்பியதுமே பதிவு இடம்பெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளது.
பதிவின் பின்னரே கட்சிக்கான சின்னம் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை வெளியிட முடியும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



0 Responses to கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் திணைக்களத்தில் ஒப்படைப்பு