Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு தேசிய ஆதரவை வேண்டி கடந்த வியாழக்கிழமை அவுஸ்திரேலிய பாராளுமன்றில் ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்பின்னர் அவுஸ்திரேலியாவும் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்களுக்கு கோரிக்கை விடும் சர்வதேசத்துக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் பிரதமராக இருந்த கெவின் ருட் தனது பதவியிலிருந்து வெளியேற, புதிய பிரதமராக ஜூலியா கில்லார்ட் அமர்ந்த தினத்திலேயே இந்த பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுக்கும் முதலாவது நடவடிக்கையாகவும் இது விளங்குகிறது.

கடந்த ஆண்டில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட கண்மூடித்தனமான அட்டூழியங்களை உலகம், குறிப்பாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைவராகவுள்ள அவுஸ்திரேலியா பேசாமல் பார்த்துக்கொண்டு இருந்தது எனச் சுட்டிக்காட்டிய கிரீன்ஸ் கட்சிக்கான அவுஸ்திரேலியன் தமிழர்கள் அமைப்பு, கடந்த கால தொழிலாளர் மற்றும் தாராள கொள்கைக் கட்சிகளுக்கு விலக்காக தற்போதைய கீரீன்ஸ் கட்சியின் எடுத்துக்காட்டான மாற்றத்தை இந்தப் பிரேரணை எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளது. மேற்படி மகஜர் கிரீன்ஸ் செனட்டர் சரா ஹன்சன்-யங்கால் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய தொழிலாளர் கட்சி அரசாங்கமானது ஆயுதப் போரினால் தமிழர்கள் பட்ட மனிதாபிமானச் சிக்கல்கள் குறித்து வெளியில் பேச மறுப்புத் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது என கிரீன்ஸ் கட்சிக்கான அவுஸ்திரேலியன் தமிழர்கள் அமைப்பின் பேச்சாளர் நாதன் சிறி தெரிவித்தார்.

பொருளாதார ஆர்வங்கள் மற்றும் இரு தரப்பு உறவுகள் ஆகியவற்றைத் தக்கவைப்பதில், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தாம் அதிகம் விரும்பக்கூடிய பொருளாதார உறவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக மனித வாழ்வின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட இடத்தில் எடுத்துக்காட்ட விருப்பங்கொள்பவை ஆகும். ஆனால் அவுஸ்திரேலிய தொழிலாளர் கட்சி 40,000 உயிர்களைப் பலிகொடுத்துள்ள மற்றும் இன்றும் தொடர்கின்ற மனித உரிமை மீறல்களை அனுமதிக்கின்ற மென்மையான அணுகுமுறையையே செயற்படுத்தத் தீர்மானித்திருந்தது என சிறி தொடர்ந்து சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பெடரல் அரசாங்கம் அகதி அந்தஸ்து கோரும் விண்ணப்பங்களை நிறுத்தி வைத்தது. ஆகவே அட்டூழியங்களைத் தட்டிக்கேட்பதை அனுமதிக்காத ஒரு அரசாங்கம் எங்களுக்கு இருந்தது. இப்போது இதுபோன்ற வன்முறைகளுக்கான மறைமுகவிளைவுகளை உருவாக்கும் கைகளை அப்புறப்படுத்துவதில் சந்தோசம் என்றார் சிறி. தற்போதைய மகஜரானது அட்டூழியங்களைத் தடுக்கின்ற முறையில் நம்பிக்கையை வளர்ப்பதற்கு ஏராளமானதைச் செய்யும். ஆனால், இப்போதும் நெடுந்தூர பயணம் ஒன்று எங்களுக்கு உள்ளது என்பதையும் சிறி குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் வட்டாரங்களும், மனித உரிமைகள் சட்டத்தரணிகளும் கிரீன்ஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரையனனை புகழ்கின்றனர். அவுஸ்திரேய தடுப்பு முகாம்களில் தமிழ் அகதிகள் படும் இன்னல்களை வெளித்தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கடந்த ஆண்டு தமிழர்களால் நடத்தப்பட்ட பல்வேறு நினைவு நிகழ்வுகளில் பங்கெடுத்த முக்கியமானவர்களில் இவரும் ஒருவராவார்.

0 Responses to இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை: அவுஸ்திரேலியா ஆதரவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com