சிறீலங்கா அரசு மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பாக எழுத்தில் உறுதியளித்தால் மட்டுமே ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நீடிக்கப்படும் என, ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சிறீலங்கா அரசுக்கு அறிவித்திருப்பதாகவும், சிறீலங்கா அரசு எழுத்தில் உறுதியளித்தால் மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பதற்கு தமது சபைக்கு பரிந்துரைக்க முடியும் எனவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதிநிதகள் குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை முதலாம் நாளுக்கு முன்னர் இந்த எழுத்துமூல உறுதிமொழி தமக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது.
சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்த ஐரோப்பிய ஒன்றியம், ஓகஸ்ட் 15ஆம் நாளுடன் சிறீலங்கா அரசுக்கு வழங்கிவந்த ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இடை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.



0 Responses to எழுத்தில் உறுதியளித்தால் மட்டுமே ஜி.எஸ்.பி.பிளஸ் - ஐரோப்பிய ஒன்றியம்