மலேசியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்மிழர்கள் 75 பேரையும் விடுதலை செய்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மலேசியாவில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவிருக்கின்றது.எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி பேரணியையும் நடத்தப்படவிருக்கின்றனர்.
இது பற்றி அறியவருவதாவது:
மலேசியாவில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ள 75 ஈழத் தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
போலி முகவர்கள் மூலம் வந்தவர்கள் என்று அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வாபஸ் பெறவேண்டும்.இவர்களை இலங்கை அரசு அழைத்தாலும் அங்கே இவர்களை திருப்பி அனுப்பக்கூடாது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
தனிமைச்சிறையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.என்ற ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று செயலணித்தலைவர் கலைவாணர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஐ.நா. சபை அலுவலகம் நோக்கி பேரணியும் நடத்தப்படவுள்ளது.
பேரணியின் நிறைவில் ஐ.நா.வின் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பிரதிநிதி ஜமால் மல்கோத்ராவிடம் நேரடியாக மனுவை கையளித்து கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



0 Responses to ஈழத் தமிழர்களை விடுவிக்ககோரி மலேசியாவில் இன்று ஆர்ப்பாட்டம்