தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளுக்கு இந்தியா விதித்திருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. எனினும் பார்வதி அம்மாள் தொடர்ந்து எங்கு இருப்பார் என இதுவரை தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தமிழ் தேசிய விடுதலை கூட்டணியின் சிவாஜிலிங்கம் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.பார்வதி அம்மாளின் உடல்நிலை நாளுக்குநாள் தேறி வருவதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், தற்போது பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இந்திய விஜயம் தொடர்பில் அவரது பிள்ளைகளே தீர்மானிப்பார்கள் எனவும் குறிப்பிட்டார்.
பார்வதி அம்மாள் தமிழகத்திலுள்ள அவரது புதல்வியின் வீட்டில் தங்கவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திக்கவும் இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.



0 Responses to பார்வதி அம்மாளுக்கு விதிக்கப்பட்ட தடை முற்றாக நீக்கம்: சிவாஜிலிங்கம்