இலங்கை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவை கலைப்பதற்கான முடிவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுக்கும்வரை இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தை சுற்றிவளைக்குமாறும், அங்குள்ள உத்தியோகர்த்தர்களை தடுத்து வைக்குமாறும் பொதுமக்களிடம், அரசாங்க அமைச்சர் விமல் வீரவன்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் 3 பேரைக் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டிருப்பதானது இலங்கைத் தலைவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் ஆரம்பகட்ட நடவடிக்கை என்றும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டார்.



0 Responses to கொழும்பில் உள்ள ஐ.நா அதிகாரிகளை பணயக்கைதிகளாக பிடிக்க விமல் கோரிக்கை