Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடிம்பிமலை பிரதேசத்தில் நேற்று ஸ்ரீலங்கா விமானப்படைக்கு சொந்தமான கிபீர் விமானம் குண்டுவீச்சு தாக்குதலை நடாத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியும், பய பீதியோடும் மக்கள் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடிம்பிமலைப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடாத்தியதாக அங்கிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

திடீரென குடிம்பிமலை வான் பரப்புக்குள் பிரவேசித்த ஸ்ரீலங்கா வான்படையினரின் இரண்டு கிபீர் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தி சென்றதாகவும், இதனால் தாம் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

போர் முடிந்துவிட்டது என கூறிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா அரசு இவ்வாறு மீண்டும் விமானக் குண்டுத்தாக்குதல்களை நடாத்துவது அதிர்ச்சியாக உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை அம்பாறை தாண்டியடிக் காட்டுப் பகுதியில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் இது தொடர்பாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பில் இருந்து இதுவரை செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

0 Responses to மட்டக்களப்பு குடிம்பிமலையில் கிபீர் விமானங்கள் தாக்குதல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com